துடிப்பேத்தும் நடுப்பக்கம்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கொத்துகொத்தாக கட்டழகு ‘வண்ணத்திரை’யிலே; உற்றுப் பார்த்தும், தொட்டுப் பார்த்தும் ஆசை தீரலை; துடிப்பேத்தும் நடுப்பக்கம் செம உசுப்பலு; கடுப்பேத்தி மட்டையாக்கும் காட்டு கலக்கலு...
- கவிஞர் கவிக்குமரன், பெரவள்ளூர்.

பாடகி சுசித்ரா தொடர்பான ‘சுசிலீக்ஸ்’ சர்ச்சைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை. திரையுலகை நோக்கி வரும் பெண்களை அச்சப்படுத்தக்கூடிய நிகழ்வாக இது அமைந்து விட்டது.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

‘ரூமுக்கு வர்றியா?’ என்கிற வாசகத்தை அட்டைப்படத்தில் கண்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தேன். பக்கங்களை புரட்டிப் பார்த்தால் சப்பை மேட்டர் என்பது புரிந்து மட்டையானேன்.
- ராஜகுமாரன், ஈரோடு.

சிபிராஜின் ஆதங்கம் நியாயமானது. தனக்குப் பொருத்தமான கதாநாயகி அமையாததற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்று அவர் அலசியது நேர்மையானது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

லட்சுமிராய்க்கு ‘துண்டு நிறைய விழுது’ன்னு போட்டோக்களைப் பார்த்தாலே நல்லா தெரியுது.
- குந்தவை, தஞ்சாவூர்.

மடிப்பு குறித்த டிரெண்டு மாறிவிட்டதை சரோஜாதேவி எடுத்துச் சொன்ன பிறகுதான் உணர முடிகிறது.
- வேணுகோபால், ராமநாதபுரம்.

அஸ்வின்சேகர் வில்லனாக நடிக்கவும் தயாராக இருக்கலாம். அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர் யாராவது ரெடியாக இருக்க வேண்டுமே?
- ராஜமுருகன், குடியாத்தம்.