கைபடாத ரோஜா!



சரோஜாதேவி பதில்கள்

* ஆண் மனம் எப்போது குரங்காகிறது?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
கொழுத்த பெண் மனத்தைப் பார்க்கும்போது....

* அடங்காத தாகம் எது?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
‘அதை’த்தான் நான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அதெல்லாம் ஐந்து நிமிடங்களில் தணிந்து விடக்கூடிய தாகம் சார். திரும்ப கமெடுக்க கொஞ்ச நேரம் ஆகும்.

* இந்திய கிரிக்கெட் அணி தடுமாறுவது போல தோன்றுகிறதே?
- ஆர்.கார்த்திகேயன், அண்ணாநகர்.
பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டால்தான் தொடர்ந்து வெல்ல முடியும். நம் வீரர்கள் பேட்டிங்கில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.

* கைபடாத ரோஜா கண்மணி சரோஜா என்று உங்களை வர்ணிக்கலாமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
படலைன்னு உங்களுக்குத் தெரியுமா?

* எண்பது கூட இருபதைத் தேட என்ன காரணம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
சும்மா அசை போடுறதுக்குதான். அந்த வயசுலே வேறென்ன முடியும்?