பூர்ணிமாவுக்கு பதில் ரேவதி
தனுஷ் டைரக்ஷன் அவதாரம் எடுத்து இயக்கி நடிக்கும் படம் ‘ப.பாண்டி’. இந்தப் படத்தில் பவர் பாண்டி கேரக்டரில் ராஜ்கிரண் நடிக்கிறார். ரேவதி, பிரசன்னா, சாயாசிங் உள்பட படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தில் ராஜ்கிரணுடன் நடிக்க பூர்ணிமா பாக்யராஜைக் கேட்டிருக்கிறார்கள்.
 அவரும் நடிக்க ஓ.கே. சொல்லி படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். இரண்டு மூன்று நாட்கள் ராஜ்கிரண்-பூர்ணிமா ஜோடி சேர்ந்து நடித்த காட்சிகளை எடிட் பண்ணி பார்த்ததில் பூர்ணிமா ‘யூத்’தாக தெரிந்தாராம். இதைத் தொடர்ந்து ரேவதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இப்போது ரேவதி காட்டில் அடை மழை. ‘ப.பாண்டி’ படத்தின் மூலம் மீண்டும் ரேவதியின் அபாரமான நடிப்பு வெளிப்பட்டதைத் தொடர்ந்து ரேவதிக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளதாம்.
- எஸ்
|