தத்துவம் பேசும் வில்லன்!



தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும் அடக்கமான உடல்மொழியால் ரசிகர்களைக் கவருவதுதான் மதுசூதனனின் அடையாளம். சமீபத்தில் வெளிவந்த ‘மாநகரம்’, மதுசூதனனை மோஸ்ட் வான்டட் வில்லனாக தமிழ் சினிமாவில் உருவெடுக்க வைத்திருக்கிறது.“சினிமாவுக்கு வரும்போது பெரிய கனவுகள் இருந்தன. ஆனாலும், சின்ன வேடங்கள்தான் கிடைத்தன. விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’வில் நாயுடு கேரக்டர்தான் எனக்கு திருப்புமுனை. தொடர்ந்து பெரிய படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் கிடைத்தன.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் டஜன் கணக்காக நடித்து வருகிறேன்.இத்தனை ஆண்டு அனுபவத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. நம்மிடம் எதுவும் இல்லை, நம்மால் எதுவும் இல்லை, காலம்தான் நம்மை அதன் பாதையில் வழிநடத்தும் என்பதை உணர்ந்திருக்கிறேன். என்னை காலத்திடம் ஒப்படைத்துவிட்டேன்” என்று தத்துவ பூர்வமாகப் பேசுகிறார் மதுசூதனன்.

- எஸ்