பாயில் ஆகுது ஹார்ட்டு! ஸ்பாயில் ஆகுது ஸ்லீப்பு!!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
 மூன்றே முக்கால் அடி உயரம் கொண்ட நடிகர் கிங்காங் பற்றிய நேர்காணலுக்கு ஆறுபக்கங்கள் ஒதுக்கிய ஆசிரியர் குழுவினருக்கு நன்றி. அவருடைய உடல் உயரம் சிறிது என்றாலும், மன உயரம் மலையினும் அதிகம். - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வறட்சியில் வாடும் என்னைப் போன்ற தமிழர்களுக்கு பாயல் கோஷின் வனப்பும், செழிப்பும் நடுப்பக்கத்தை சோலையாக்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. - ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.
அதிரடி கவர்ச்சி புளோ அப்புகளை கண்டு பாயில் ஆகுது ஹார்ட்டு, ஸ்பாயில் ஆகுது ஸ்லீப்பு. பொங்கல் முடிந்தும் பொங்குது இளமை. ஏங்கியே தவிப்பது இளசுகள் நிலைமை. வண்ணத்திரையே! மின்னும் கவர்ச்சிக்கு தாங்குகிறாய் தலைமை... - கவிஞர் கா.கவிக்குமரன், பெரவள்ளூர்.
மூணாம் பக்க அனிதாவை கண்கொண்டு பார்த்து, கை கொண்டு செய்தோம் காதல் விளையாட்டு. - ராஜேந்திரன், நங்கநல்லூர்.
‘திரை சரம்’ பகுதியில் சரம் தொடுத்து நீங்கள் தரும் தகவல்கள் வெகுசிறப்பு - குந்தவை, தஞ்சாவூர்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவை காணமுடியாத எங்களுக்கு, ‘வண்ணத்திரை’ கொடுத்த ரவுண்டப் வரப்பிரசாதம். - நாஞ்சில் கார்த்திக், பார்வதிபுரம்.
தமிழரின் பாரம்பரியத்துக்காக தமிழர்கள் வீதியில் இறங்கி போராடிய நேரத்தில், ‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் இயக்குநர் ராஜுமுருகன் எழுதிய ‘ஜோக்கர்’ கட்டுரை பொருத்தமானதாக அமைந்தது. - தமிழ் திலீபன், காங்கேயம்.
|