பலம்



சிந்தனையே பலம்!

ஹிரித்திக் ரோஷனும், யாமி கவுதமும் பார்வையற்ற இளம் தம்பதியினர். உள்ளூர் அரசியல்வாதியின் தம்பிக்கு கொத்தும், குலையுமாக இருக்கும் யாமி மீது கண்ணு. தன்னுடைய அல்லக்கை ஒருவனோடு சேர்ந்து, ஹிரித்திக் இல்லாத நேரமாக வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வன்புணர்வு செய்து விடுகிறார்.

நீதி கேட்டு ஹிரித்திக்கும், யாமியும் காவல்நிலையத்துக்கு செல்கிறார்கள். காவல் நிலையமோ அரசியல்வாதிக்கு சார்பாக இவர்களது சாட்சிகளை கலைத்து அநீதி இழைக்கிறது. யாமிக்கு மீண்டும் அதே கொடுமை தொடர, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.பார்வையற்ற ஹிரித்திக், தன் மனைவியின் மரணத்துக்கு காரணமானவர்களை டெக்னிக்கலாக பழி வாங்குவதே ‘பலம்’.

ரேப்புக்கு பழிவாங்கும் அரதப் பழசான இந்தக் கதையை தூசுதட்டி பிரும்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள். ஆடல், பாடல் என்று தன்னுடைய வழக்கமான பங்களிப்புக்கு ஹிரித்திக் எந்த குறையும் வைக்கவில்லை என்றாலும், படத்தின் அடிநாதமான சோகம் அவற்றையெல்லாம் போக்கடித்து விடுகிறது.முதல் பாதி ஸ்லோ என்பதால், இரண்டாம் பாதியில் டபுள் ஸ்பீட் எதிர்பார்த்து ஏமாந்தோம்.