டாப்லெஸ் தரிசனம்!



‘பாகுபலி’ ராஜமவுலி, மகாபாரதத்தை படமாக எடுக்கவுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. அமீர்கான், ஷாருக்கான் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றும் கூடுதலாக கண், மூக்கு சேர்த்து சொல்கிறார்கள். ராஜமவுலியின் அப்பா, விஜயேந்திர பிரசாத் இச்செய்தியை மறுத்திருக்கிறார்.‘ரேஸ்-3’ படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா சர்மாவிடம் பேசியிருக்கிறார்கள்.

‘ரேஸ்’ வரிசைப் படங்கள் கிளாமருக்கு பிரபலம். வகைவகையான பிகினி அணிந்து நடிக்க வேண்டும் என்பதால் வழக்கமான சம்பளத்தோடு கூடுதலாக 60 லட்சத்தை வெட்டினால் ஓக்கே என்கிறாராம் அனுஷ்கா.‘ட்ரிபிள் எக்ஸ்’ ஹாலிவுட் படத்தில் நடித்த தீபிகா படுகோனே, சமீபத்தில்  ஒரு விழாவுக்கு அரைகுறை ஆடையில் வந்திருக்கிறார்.

ஆடை கொஞ்சம் சரிந்து  டாப்லெஸ் தரிசனம் மற்றவர்களுக்கு கிடைக்க, அவர் சுதாரிக்கும் முன்னரே  ‘கிக்’கான அந்தக் காட்சியை போட்டோகிராபர்கள் ‘க்ளிக்’கித் தள்ளிவிட்டார்களாம்.‘காபில்’ ஹீரோயின் யாமிகவுதம், நடிகர் புல்கிட் சர்மாவை லவ்வோ லவ்வு என்று லவ்விக் கொண்டிருக்கிறார். ‘காபில்’ படப்பிடிப்பின்போது யாமியிடம் ஹீரோ ஹிருத்திக் ரோஷன் காட்டிய நெருக்கத்தை கேள்விப்பட்ட புல்கிட், புல்லட் கணக்காக வெடித்துக் கொண்டிருக்கிறாராம்.

- ஜியா