மலர்ந்த மொட்டு மம்தா!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கதையே இல்லாத படங்களை எல்லாம் நம் கண்கள் ரசிக்கும்போது, இசையே இல்லாத படத்தை செவிகள் கேட்காதா என்ன? எவ்வளவோ பார்த்துட்டோம். விஜய் மில்டன் எடுக்கப் போற படத்தையும் பார்த்துடுவோம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

சித்து+2 என்கிற சிலுமிஷமான படத்தில் அறிமுகமான சாந்தினி, காதலிக்க நேரமில்லை என்று சொல்லுவது ரசிகர்களுக்கு காதுகுத்து.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வாயில் விரலை வெச்சிக்கிட்டு கடிக்கத் தெரியாம திருதிருன்னு முழிக்கிற பாப்பா ஹன்சிகாவோட படத்தை அட்டையிலே போட்டு, ‘மேளத்தை அடிச்சிட வேண்டியதுதான்’ என்று டைட்டில் கொடுக்கும் ‘வண்ணத்திரை’யின் குசும்பே குசும்பு.
- ராம் சரவணன், தேன்கனிகோட்டை.

நடுப்பக்க மலர்ந்த மொட்டு மம்தாவை கண்டதுமே மனசை கொட்டிவிட்டேன்.
- சீனிவாசன், திருப்பனங்காடு.

ராதிகாவை ஒரு நடிகையாக மட்டுமே பார்க்கும் சமூகத்தில் அவரது பன்முகத் திறமையை படம் போட்டுக் காட்டி ‘ஹீரோயினிஸம்’ பகுதியில் தனி முத்திரை பதித்துவிட்டார் மீரான்.
- மணிசேகர், புதுச்சேரி.

அனைகா சோட்டியின் புளோஅப்பில் எத்தனை நட்சத்திரங்கள் என்று எண்ணி எண்ணி கண்ணு பூத்துவிட்டது.
- கணபதி, ஜோலார்பேட்டை.

சினிமாத்துறையில் அனைவரும் அனுஷ்காவிடம்தான் யோகா கற்றுக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கற்ற பா.விஜய் வித்தியாசமானவர்தான்.
- ‘கில்மா’ சுரேஷ், திருத்தணி.