க்யூட் குண்டாத்தி ஸ்பீக்கிங்...



‘சேதுபதி’ குண்டாத்தி செமத்தியான சந்தோஷத்தில் இருக்கிறார். நேற்று வரை ஹீரோக்களோடு மரத்தைச் சுற்றி டூயட் பாடிக் கொண்டிருந்தவர், திடீரென்று இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, பொறுப்பான குடும்பத்தலைவியாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விட்டார். அதிரடி வெற்றி தந்திருக்கும் பூரிப்பில் இன்னும் ஒரு சுற்று குண்டடித்திருக்கும் ரம்யா நம்பீசனிடம் பேசினோம்.

“நீங்க சினிமா பேக்கிரவுண்ட் உள்ள ஃபேமிலிதான் இல்லையா?”

“ஆர்ட் பேக்கிரவுண்டுன்னு சொல்லலாம். அப்பா சுப்ரமணியம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். அம்மா ஜெய ஹோம்மேக்கர்தான். இருந்தாலும் ஆக்டிங், மியூசிக்குன்னு அவங்களுக்கு நல்ல நாலெட்ஜ். அண்ணன் ராகுல் மியூசிக் டைரக்டர். சின்ன வயசுலே இருந்தே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை. குழந்தை நட்சத்திரமா சில படங்கள் செஞ்சேன்.

பாசில் இயக்கிய ‘ஒரு நாள் ஒரு கனவு’தான் எனக்கு ஆக்சுவல் என்ட்ரி. அப்புறம் சேரனோட ‘ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர். ‘குள்ளநரி கூட்டம்’ படத்துலே ஆடியன்ஸ் கவனிக்க ஆரம்பிச்சாங்க. ‘பீட்சா’வில் நல்ல ஹிட். ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘சேதுபதி’ன்னு இப்போ லைஃப் நல்லா போய்க்கிட்டிருக்கு.”

“இப்போ ‘சேதுபதி’க்குப் பிறகு ஊரே கொண்டாடுது போல?”
“ஆமாம். படம் செம ஹிட். சோஷியல் நெட்வொர்க் சைட்டுகளில் எல்லாம் கொண்டாடுறாங்க. ஃபிரெண்ட்ஸெல்லாம், கலக்கிட்டே ரம்யான்னு மெசேஜ் அனுப்புறாங்க. இந்த வெற்றியை தக்க வெச்சுக்கணும். இனிமே நான் வெறும் கமர்ஷியல் ஹீரோயின் இல்லைங்கிற ஃபீல் வந்திருக்கு.”“இவ்வளவு இளமையா இருக்கீங்க. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சிருக்கீங்களே?”

“சோ வாட்? கேரக்டருக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டியது ஆர்ட்டிஸ்டோட கடமை. இதுலே என்ன இமேஜ் டேமேஜ் ஆகப்போவுது? உங்களுக்கு அம்மா கேரக்டருன்னு டைரக்டர் முதல்லேயே சொல்லிட்டாரு.

விஜய் சேதுபதியே அப்பாவா நடிக்கிறப்போ, நான் அம்மாவா நடிக்க தயங்குவேனா? இந்த கதை மேலே எங்க எல்லாருக்கும் நம்பிக்கை இருந்தது. நிறைய ஹீரோயின்ஸ் ஏன் இப்படிப்பட்ட இளம் அம்மா கேரக்டரை எடுத்துக்க தயங்குறாங்கன்னு தெரியலை. ‘காக்கா முட்டை’யில் நடிச்சபிறகு ஐஸ்வர்யாவுக்கு எவ்வளவு ஃபேம் கிடைச்சிருக்கு? நம்ம கேரக்டர் வெயிட்டுன்னா தயங்காம எந்தமாதிரி வேடங்களிலும் நடிக்கலாம்.”

“யார் கூட நடிக்க ஆசை?”

“சூர்யா ‘பிதாமகன்’, ‘கஜினி’ன்னு எவ்வளவு சாதனைகள் பண்ணியிருக்காரு! அவரோட ஒரு படத்திலேயாவது நடிச்சிடணுங்கிறது என்னோட லட்சியம்.”“விஜய் சேதுபதி, அருள்நிதி, விஷ்ணுவிஷால்னு டிரெண் டிங்கில் இருக்குற ஹீரோஸுக்கு நீங்கதான் ஃபேவரைட் போல?”
“விஜய்சேதுபதியோட ‘பீட்சா’வுக்கு அப்புறம் ‘சேதுபதி’. மத்த ரெண்டு பேரோடவும் ஒவ்வொரு படம்தான் பண்ணியிருக்கேன். விஜய், இப்போ வேற லெவல். தமிழ்நாடு ஃபுல்லா அவருக்கு ரசிகர்கள். மனிதநேயம் மிகுந்தவர்.

எந்த டாபிக் பேசினாலும் அதைப்பத்தி நல்லா ஆழமா பேசுவார். சினிமான்னா உயிரு. கேரக்டரை நல்லா உள்வாங்கிக்கிட்டு பண்ணுவாரு. அருள்நிதி அவ்வளவா பேசமாட்டார். கூச்சம் ஜாஸ்தி.

அதேநேரம் யாரையாவது கலாய்க்கணும்னா இறங்கி அடிப்பார். விஷ்ணு ரொம்ப சிம்பிள். எதைப்பத்தியும் கவலைப்படமாட்டார். அவரோட மனசுக்கு எது தோணுதோ அதை பட்டுன்னு பேசிடுவார். மூணு பேருமே எனக்கு நல்ல ஃபிரெண்ட்ஸ்தான்.”
“எந்தமாதிரி கேரக்டர் பண்ண விருப்பப்படறீங்க?”

“இந்தியிலே ‘குயீன்’னு ஒரு படம் கங்கனா ரனாவத் பண்ணியிருக்காங்க. அது மாதிரி பண்ணணும். ஆனா, கமர்ஷியல், ஆர்ட்டுன்னு படங்களை பிரிச்சி வெச்சி ஒத்துக்க மாட்டேன். எல்லா ஜானரிலும் சாதிக்கணும்.”
“ரம்யாவோட ஒரிஜினல் கேரக்டர்?”

“நான் ரொம்ப அன்பான பொண்ணு. எல்லாருக்கும் மரியாதை கொடுப்பேன். திடீர் திடீர்னு டென்ஷன் ஆகுறது பெரிய மைனஸ். ஆனா உடனே சரியாயிடுவேன். கொஞ்சமில்லை. நிறையவே ஹோம் சிக். ஷூட்டிங் இல்லைன்னா வீட்டில்தான் இருப்பேன்.”
“அடுத்து?”

“நிறைய கதை கேட்கிறேன். கொஞ்சம் கவனமா செலக்ட் பண்ணி பண்ணணும். ஏற்கனவே நடிச்சி முடிச்சிட்ட ‘ரெண்டாவது படம்’ ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. கன்னடத்தில் ‘ஸ்டைல் கிங்’. இப்போதைக்கு அவ்ளோதான்.

- சுரேஷ் ராஜா