அவசர அடி!
அதிரடி விமர்சனம்
சிலம்பாட்ட வாத்தியார் மன்சூர் அலிகான். மீனவப் பெண் மெளமிதா செளத்ரி. இருவரையும் வைத்து ‘அதிரடி’ என்றொரு படம் எடுக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆகும்போது படத்தை வெளியிடக்கூடாது என்று பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துகிறார்கள். ‘அதிரடி’ படத்தை எதிர்க்க என்ன காரணம் என்று புலனாய்வு செய்ய போலீஸ் களமிறங்குகிறது. பிரச்சினைகளைக் கடந்து படம் வெளியானதா என்பதே ‘அதிரடி’ படத்தின் மீதிக்கதை.

மன்சூர் வழக்கம்போல பிரமாதம். அவருடைய டிரேட்மார்க் நக்கல், நையாண்டி காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சப்தம் தூள் பரத்துகிறது. நடிப்பு மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம், இசையும் அவரே. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரசிகர்களின் நெஞ்சை குறிவைத்து எறியப்பட்ட நாயகி மெளமிதாவின் தாராளம், கச்சிதமாக இலக்கை அடைந்திருக்கிறது. முத்துகுமாரின் ஒளிப்பதிவு ஜஸ்ட் பாஸ். கதைக்கு நேர்மையாக உழைத்திருக்கிறார் இயக்குநர் பாலு ஆனந்த்.
|