கவன ஈர்ப்பு



மய்யம் விமர்சனம்

நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் அடிக்கடி இடம் பெறும் இடம் ஏ.டி.எம். மையம். அந்த மையம்தான் ‘மய்யம்’ படத்தின் கதைக்களம். பணக்காரப் பெண்ணான சுஹாசினி குமரனை நவீன் சஞ்சய் காதலிக்கிறார். ரகசியத் திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுக்கிறார். திருமணச் செலவுக்கு பணம் எடுக்க நண்பன் முருகானந்துடன் ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு வருகிறார். அதே ஏ.டி.எம். மையத்துக்கு மாடலிங் அழகியான ஜெய்குஹானியும் பணம் எடுக்க வருகிறார். மூவரும் பணத்தோடு வெளியே வந்தால் அவர்களைத் தாக்கி பணம் பறிக்க கொலைக்கு அஞ்சாத கொள்ளைக்காரன் ஒருவன் வெளியே காத்திருக்கிறான். இது அறிந்து மூவரும் உயிருக்கு அஞ்சி ஏ.டி.எம்.
 


மையத்துக்குள்ளேயே காத்திருக்கிறார்கள். எப்படி இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருகிறார்கள் என்பதே திகிலான கதை. முற்றிலும் புதுமுகங்கள். கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். ரோபோ ஷங்கரின் காமெடி சிரிக்க வைக்கிறது. இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் கல்லூரி மாணவர். கலக்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சமூக சிந்தனையோடு கதை எழுதியிருக்கும் ஏ.பி.ஸ்ரீதரின் முயற்சி பாராட்டுக்குரியது.