நண்பனின் துரோகமே ‘அதிபர்’ ஆனது!



‘அதிபர்’ படம் ஜீவனுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது. அதன் தயாரிப்பாளர் டி.சிவகுமார், கனடாவில் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். தன் நண்பர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட சம்பவத்தையே ‘அதிபர்’ ஆக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ‘பென் கன்ஸோர்ஷியம்’ பட நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார். இதில் ஒரு படத்தில் மூன்று முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். செல்வா இயக்குகிறார். அந்தப் படத்துக்கும் சிவகுமாரே கதை எழுதியிருக்கிறார்.



“சினிமா என்னுடைய சிறுவயது கனவு. இருந்தாலும் வாழ்க்கையில் பக்காவாக செட்டில் ஆனபிறகே இத்துறையில் நுழைய வேண்டும் என்று நினைத்தேன். போதும் போதும் என்று பொருள் சேர்த்த நிலையில், நண்பன் ஒருவனின் துரோகத்தால் வீழ்ந்தேன். மீண்டும் இரவு பகல் பாராத உழைப்பினைச் செலுத்தி மீண்டேன். என்னுடைய சினிமா கனவினையும் நிறைவேற்றிக் கொண்டேன்” என்கிறார் சிவகுமார்.

- ரா