அம்மாவா காரணம்?
சுனாமி மாதிரி தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் முதல் படம் வெளிவருவதற்கு முன்பாகவே சடசடவென்று நான்கைந்து படங்களில் கமிட் ஆனார். அறிமுகமே விக்ரம் பிரபுவுடன், தனுஷ் படம், அடுத்தடுத்து சிவகார்த்திகேயனோடு இரண்டு படங்கள், பாபிசிம்ஹாவோடு ஒரு படம் என்று இளம் ஹீரோக்களின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக உருவெடுத்தார்.

ஆனால்-முதல் படமான ‘இது என்ன மாயம்?’ வெளிவந்த பிறகு, அவர் மீதிருந்த கிரேஸ் சட்டென்று வடிந்துவிட்டதாக ஒரு தோற்றம். அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சரியாகப் போகவில்லை. அடுத்து வெளியாக வேண்டிய ‘ரஜினி முருகன்’, பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் சினிமா உலகம், கீர்த்தி என்றாலே அலற ஆரம்பித்துவிட்டது. அந்நாள் ஹீரோயின் மேனகாதான் இவருடைய அம்மா. எப்போதும் கீர்த்தி கூடவே இருந்து எல்லா விஷயங்களிலும் மேனகா தலையிடுவதால்தான் கீர்த்தியின் கீர்த்தி குறைகிறது என்று யாரோ கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். இதனால் அம்மா இல்லாமல் தானே கதை கேட்டு தானே முடிவெடுக்கலாம் என்கிற முடிவுக்கு கீர்த்தி வந்திருப்பதாகக் கேள்வி.
|