மிஸஸ் ஆன மிஸ் கபாலி!



போச்சு. ராதிகா ஆப்தேவுக்கு கல்யாணம் ஆச்சாம். “ஏன் இத்தனை நாளா மறைச்சீங்க?” என்று மனசு உடைந்து  போன நிலையில் அவரிடம் கேட்டோம். “நீங்கதான் கேட்கவேயில்லையே? கேட்டிருந்தால் சொல்லிட்டுப் போறேன். நான் எங்கே மறைச்சேன்?” என்று பதிலுக்கு கேட்கிறார். ராதிகாவின் கணவர் பெனடிக்ட் டெய்லர் ஒரு பிரிட்டிஷ் இசைக்கலைஞர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நடனம் குறித்து ஆய்வு செய்ய இங்கிலாந்துக்கு ராதிகா போனபோது காதல் பற்றிக் கொண்டதாம். சில நாட்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து தங்களுக்குள் ஒத்துவரும் என்று கண்டுகொண்ட பிறகு பதிவுத் திருமணம் செய்துகொண்டார்களாம்.



விஷயம் கேள்விப்பட்டு ரஜினி ரசிகர்கள்தான் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார்கள். பொதுவாக ரஜினி படத்தின் ஹீரோயின்கள் மிஸ் ஆகத்தான் இருப்பார்கள் (இடையில் மிஸஸ் அபிஷேக் பச்சனான ஐஸ்வர்யா ராய் மட்டும் உலக அழகி என்பதால் விதிவிலக்கு). இந்த வழக்கத்துக்கு மாறாக திருமணமான ராதிகாவோடு நடிக்கிறாரே, தலைவரின் இளமை இமேஜ் என்னாவது என்று அலுத்துக் கொள்கிறார்கள்.