அவ்ளோதான் மேட்டர்புகைச்சல் கொடுக்கும் புகழ்!

புகழை பெயராகக் கொண்ட நடிகை ஓவர் லொள்ளு பண்ணுவதாக கோடம்பாக்கத்தில் பேச்சு. திவ்யமான நடிகைக்கு ஆப்பு வைப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் என்று மீடியா ஓவர்ஹைப் அவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கால்ஷீட் சொதப்பலால் புகழ் நடிகையின் புகழ் இறங்குமுகத்துக்கு போய்க் கொண்டிருக்கிறதாம். வருகிற வாய்ப்புகளை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டு, ஒருவருக்கும் ஒழுங்காக கால்ஷீட் கொடுப்பதில்லையாம். இதனால் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட பல படங்களில் இருந்து திடீர் திடீரென்று அவரை நீக்குகிறார்களாம்.‘நோ ஒர்ரி’ படத்தில் ஜீவ நடிகருக்கு இவர் தான் ஜோடி என்றார்கள். இப்போது பார்த்தால் காஜல் நடிக்கிறார். துள்ளும் இளமை ஒல்லி நடிகரின் படத்தில் இவரை நீக்கிவிட்டதாக சொன்னார்கள். ஆனால், படப்பிடிப்பில் இவர் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக புகழின் புகழ் தாறுமாறாக குழப்பிக் கொண்டிருக்கிறது. ‘ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க வீட்டுக்குள்ளே முடங்கிப்போன கதை உனக்குத் தெரியுமா?’ என்று நடிகையின் காதுபட புரொடக்‌ஷன் உதவியாளர்கள் மெட்டு போட்டு பாட்டு பாடுகிறார்களாம்.