மீண்டும் சிங்கம்!





‘சாமி’, ‘அருள்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக வதந்தி. இதுபற்றி ஹரியிடம் விசாரித்தால் சிரிக்கிறார். “நானும், விக்ரமும் மீண்டும் இணைவதாக வந்த தகவலில் இன்று வரை உண்மை ஏதுமில்லை. அடுத்து நான் சூர்யாவைத் தான் இயக்குகிறேன். ஏற்கனவே நாங்கள் ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ படங்களில் இணைந்து பணியாற்றினோம். மீண்டும் நானும் சூர்யாவும் இணையும் ஐந்தாவது படமாக ‘சிங்கம் 3’ உருவாகிறது. வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்கின்றனர்” என்றார்.