‘கபாலி’க்காக பெயரை மாற்றிய நடிகை!
ரஞ்சித், ரஜினிக்காக இயக்கும் ‘கபாலி’யில் ரஜினியின் மகளாக நடிக்கிறார் தன்ஷிகா. இதற்காக ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு புது கெட்டப்பில் பளிச்சிடுகிறார். டைரக்டர் ரஞ்சித் தொடர்பு கொண்டு பேசியபோது, ரஜினி படத்தில் நடிக்கவா என்னை கேட்கிறீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம். கனவா, நிஜமா என்று கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டாராம்.
‘ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ’ ரஜினி படம் பார்த்துவிடும் ரசிகை அல்லவா? கடவுள் அருளால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக தன் பெயரை ‘சாய் தன்ஷிகா’ என்றும் மாற்றிக் கொண்டார். புது கெட்டப்பு, புதுப் பேரு... கலக்குங்க தன்ஷி!
- தேவ்
|