TNOP... த்ரிஷாவும், நயன்தாராவும் ஒண்ணா....



“யாரோடு இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்” என்று சமீபத்தில் திரிஷாவிடம் கேட்கப்பட்டது. யாராவது பிரபலமான ஹீரோவின் பெயரைச் சொல்வார் என்று எதிர்பார்த்தபோது, எதிர்பாராத பதிலைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் திரிஷா. அவர் சொன்ன பதில் ‘நயன்தாரா’.



ஏதோ சம்பிரதாயத்துக்கு சொன்ன பதில் இல்லை இது. சமகால கடுமையான போட்டியாளர்கள் என்றாலும் ஒருவர் மீது மற்றொருவருக்கு அத்தனை அன்பு. இருவரும் இறுக கட்டியணைத்து ‘நண்பேன்டி...’ என்று செல்ஃபி எடுத்து ட்விட்டரில் பதிவேற்றுகிறார்கள். தங்கள் சொந்த விஷயங்களை பரஸ்பரம் ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள். சமீபத்தில் திரிஷா நடிக்கும் ‘நாயகி’ படத்தின் டிசைன்களைப் பார்த்து வியந்த நயன், உடனடியாக போன் செய்து தலை மீது ஐஸை பக்கெட் பக்கெட்டாக கொட்டினாராம். பதிலுக்கு திரிஷாவும் நயன்தாரா நடிக்கும் ‘மாயா’ படத்தின் ஸ்டில்களைப் பற்றி பக்கம் பக்கமாக பாராட்டினாராம். ஃப்ரெண்ட்ஸ் என்றால் இப்படி இருக்கணும்!

- தேவராஜ்