சன்னி லியோனின் மதுவிலக்கு



*ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பதில் அதிக கவனம் செலுத்துகிறார் ஷாருக்கானின் திருமதி கவுரிகான்.
*தொடர் சர்ச்சை காரணமாக, டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கும் போது இலங்கைக்கு வர வேண்டாம் என அனுஷ்கா சர்மாவுக்கு தடா போட்டிருக்கிறாராம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி.
*‘ஷேர்கான்’ படத்தின் ஒரு பாடலுக்காக சல்மான்கான், நர்கீஸ் இருவரும் இத்தாலி பறந்துள்ளனர்.
*பிரியதர்ஷன் மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறார் நந்திதா தாஸ்.



*கணவருடன் இணைந்து லண்டனில் டிவி சீரியல்கள் தயாரிக்கும் கம்பெனியைத் தொடங்க உள்ளாராம் ஷில்பா ஷெட்டி.
*ரன்பீர் கபூரை மட்டும் சகோதரராக எந்த பெண்ணும் நினைக்க மாட்டாள் என ஜொள்ளுகிறார் இலியானா.
*இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தபின், குடிப்பழக்கத்தை கிட்டத்தட்ட கைவிட்டு விட்டதாக சத்தியம் செய்கிறார் சன்னி லியோன்.
*அந்தக் காலத்தில் அனில் கபூர் நடித்த ‘ராம் லக்கன்’ திரைப்படம் மீண்டும் ரீமேக் ஆகிறது. அனில் பாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளார்.
*டிவி சீரியல் நடிகருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் பிபாஷா பாசு, திருமணமே செய்துகொள்ள மாட்டாராம்.

-ஜியா