திரிஷா நிஜவுலக ஹீரோயின்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

* புரட்சித்தளபதி விஷால் பற்றிய செய்திகள் மிகவும் அருமை. பின்னட்டையும் சூப்பராக அமைந்தது. நன்றி.
- ரூபன் நகர் விஷால் மன்றம், பழனி.

* ஒவ்வொரு முறையும் இயக்குனர் ராஜேஷின் படங்களைப் பார்த்துவிட்டு வரும்போது குவார்ட்டர் அடித்தது மாதிரி மப்பாகத்தான் இருக்கும். அவரது இந்தப் போக்கு சரிதானா என்று ‘வண்ணத்திரை’யில் ‘வீ.எஸ்.ஓ.பி’ படத்துக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி நியாயமானது.
- செல்வி, சென்னை.

* திரைப்படங்களில் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா நிஜவுலகிலும் ஹீரோயின்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘ஹீரோயினிஸம்’ தொடர். திருமணம் குறித்த அவரது கருத்துகளில் முழுக்க உடன்பாடு இல்லாவிட்டாலும், அவரது துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
- பழனியாண்டி, தஞ்சை.



* பஞ்சு அருணாசலம் குறித்த அரிய தகவல்களை ‘பாட்டுச்சாலை’ தொடர் மூலம் அறிந்துகொண்டோம். நன்றி.
- சுப்பையா, காரைக்குடி.

* மனிஷா கொய்ராலா மறுபடியும் நடிக்க வருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி. உயிருக்கு ஆபத்தான நோய் ஒன்றிலிருந்து அவர் மீண்டிருக்கிறார் என்று முன்பு எப்போதோ வாசித்த ஞாபகம். அவர் வரவு நல்வரவு ஆகுக.
- மணிசேகர், மயிலாடுதுறை.

* எங்கள் பகுதிக்காரர் சினிமாவில் தடம் பதிக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அனேகமாக உலக சினிமா வரலாற்றிலேயே ஒரு பஞ்சாயத்துத் தலைவர் ஹீரோ ஆவது இதுவே முதன்முறை என்று கருதுகிறேன். கச்சிராயநத்தம் விருதகிரி நடிக்கும் ‘விருத்தாசலம்’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
- ரமேஷ், விருத்தாசலம்.