ரீடர்ஸ் கிளாப்ஸ்!
செல்ஃபீ என்கிற பெயரில் ஒருவரது அனுமதி பெறாமல் அவரை புகைப்படம் எடுப்பது அத்துமீறிய செயல் என்கிற தன்ஷிகாவின் எச்சரிக்கையை அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டும். -வசந்த், சென்னை-18.
தியேட்டருலே ரசிகர்கள் கைதட்டுறாங்களே அதுதாங்க நிஜமான விருது என்கிறாரே அனுஷ்கா. நிச்சயம் பிழைத்துக் கொள்வார். -மதன், முதலியார்பேட்டை.
வித்தகக் கவிஞர் விஜய்க்குள்ளும் ஆவி புகுந்து விட்டதா? உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தில் பேயும் கவிதை எழுதும் என்று நம்பலாம். -சுப்பு, கொமாரபாளையம்.
சோனியா மானுடைய யோகா ஸ்டில் பார்த்ததில் இருந்து எனக்கு பசியே எடுக்கவில்லை. இதனால் என் உடல்நிலைக்கு ஏதேனும் ஆகுமானால் அதற்கு வண்ணத்திரைதான் காரணம். -முரளி, கோவில்பட்டி.
கீர்த்தி சுரேஷ் நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அவர் கைவசம் ஐந்து படங்கள் என்பது நம்ப முடியவில்லை. இன்னும் அரை கோடி கூட சம்பளமாக வாங்கவில்லை என்று அவர் அங்கலாய்ப்பது எல்லாம் ஓவர். அரை கோடி என்றால் ஐம்பது லட்சம் அம்மணி. -கதிர், பேரணாம்பட்டு.
காஞ்சனா, அரண்மனை படங்களைத் தொடர்ந்து பேய்ப்படம் என்றாலே ராய்லட்சுமி என்றாகி விட்டது. ‘சவுகார்பேட்டை’யும் இந்த வரிசையில் கலக்கும் என்று நம்பலாம். என் அபிமான நடிகர் காந்தை இந்த பேய்ப்படமாவது மீண்டும் முன்னணிக்கு கொண்டுவர வேண்டும். -மதி, கன்னியாகுமரி.
கதைக்காக ஒரு நாயகி மொட்டையடித்துக் கொண்டார் என்கிற சேதி அதிர்ச்சி யடைய வைக்கிறது. அவரது கமிட்மென்ட் ஆச்சரியப்படச் செய்கிறது. நட்சத்திரா சினிமாவில் வெல்ல வாழ்த்துகள். -ரமேஷ், தர்மபுரி.
சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களுடனான தங்கள் அனுபவங்களை வாசகர்கள் கடிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வித்தியாசமான அனுபவங்கள் ‘வண்ணத்திரை’யில் பிரசுரமாகும்.
|