சேச்சி தேசத்து செய்தி
ஆஷா சரத். பாபநாசம் படத்தில் ஐஜியாக நடித்து கமல்ஹாசன் குடும்பத்தை கலங்கடித்தாரே, அவரேதான். முப்பத்தொன்பது வயதாகிறது. டிவி சீரியல் நாயகி. திருமணத்துக்குப் பிறகு துபாயில் செட்டில். இரண்டு குழந்தைகள் பெற்றுவிட்டு, இரண்டாயிரத்து பன்னிரெண்டில் சினிமாவில் நடிக்க வந்தார்.
குறுகிய காலத்திலேயே மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன் என்று உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துவிட்டதால் தென்னிந்தியாவின் ‘மோஸ்ட் வான்டட் வுமன்’ ஆகியிருக்கிறார்.‘தூங்காவனம்’ படத்தில் உலகநாயகனுக்கு இவர்தான் ஒய்ஃப் என்பது லேட்டஸ்ட் ஸ்கூப்.
|