பேபி என்கிற பேயி!
பேபி
‘பேபி’ என்ற டைட்டிலில் வந்திருக்கும் ‘பேயி’ படம். குடியிருப்பும் மருத்துவமனையும் தான் முக்கிய கதைக்களம். ஆனால், ஆவிகள் புடைசூழ சுடுகாட்டுக்குள் குடியிருக்கும் அனுபவத்தைத் தருகின்றன சதீஷ் - ஹரீஷின் இசை மற்றும் ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு.
மனைவியின் பிரசவத்தின்போது உதவிய ஒரு சிசுவைத் தத்தெடுக்கிறார் மனோஜ். எது சொந்தக் குழந்தை என்று தெரிய வரும்போது மனைவி ஷிராவுடன் தகராறு நடக்கிறது. சிசுவின் இறந்து போன அம்மா, பேயாக வந்து என்ன செய்கிறது என்பது கதை.
நல்ல கேரக்டர் கிடைத்திருப்பதை மனதில் வைத்து, இயல்பான நடிப்பால் இதயம் தொடுகிறார் மனோஜ். இரண்டு குழந்தைகளிடமும் பாசம் காட்டும் அம்மாவாக மனதுக்குள் இடம் பிடிக்கிறார் ஷிரா.பேபி வர்ஷினி, பேபி சதன்யாவின் நடிப்பில் மழலை மீறாத இயல்பு.பேயாக வரும் அஞ்சலி ராவ் நிறைவுக் காட்சியில் கண்களை நிறைக்கிறார்.
சில காட்சிகளில் மட்டுமே ேபய் தலை (முடி) காட்டுகிறது. ஆனால் ‘இதோ வரப்போகிறது’ என்ற பீதியை ஏற்படுத்தும் திரைக்கதை அமைத்து, இயக்கி ரசிகர்களிடம் பாராட்டுப் ‘PAY’MENT வாங்குகிறார் இயக்குநர் டி. சுரேஷ்.
|