கிளாமர் ஆவி!



தெலுங்கில் அனுஷ்கா ரேஞ்சுக்கெல்லாம் சார்மிக்கு மார்க்கெட் ‘லேது’ என்றாலும் எப்போதும் தன்னை ‘டாக் ஆஃப் தி டோலிவுட்டாக’ வைத்திருப்பதில் சார்மி செம ஷார்ப்பு.இந்த ஆஃப் ஸ்க்ரீன் இமேஜை வைத்து ‘மந்திரா-2’ படத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் சதீஷ். சார்மி நடித்த ‘மந்திரா’ படம் தெலுங்கில் செமத்தியாக கல்லா கட்டியது. தமிழிலும் டப்பிங் ஆகி வந்து பி & சி சென்டர் தியேட்டர்களில் நல்ல வசூல்.

செகண்ட் பார்ட் எடுத்து அதே மாதிரி அறுவடையை மீண்டும் நிகழ்த்தலாம் என்று தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிக்கிறார் சுந்தரம். படத்தின் ஹீரோ ‘கருங்காலி’ சீனிவாஸ். பேய்ப்பட கடலில் கலக்கும் இன்னொரு சிற்றாறுதான் மந்திரா-2.சொத்துக்காக ஆசைப்படும் தம்பி குடும்பம், அண்ணன் குடும்பத்தை காலி பண்ணுகிறது.

அந்த தாக்குதலில் உயிர் பிழைக்கும் சார்மியின் உடம்பில் அப்பாவின் ஆவி புகுந்து நல்லது செய்வது என்கிற கல்யாணராமன் காலத்து கதை.பேய்ப்படமாக இருந்தாலும், சார்மியின் ரசிகர்களுக்கு கிளாமர் பார்ட்டி நிச்சயம் என்று கண்ணடிக்கிறார்கள் படக்குழுவினர்.

-ரா