இரவினில் ஆடும் தன்ஷிகா!மீரா கதிரவன் இயக்கும் ‘விழித்திரு’ படத்தின் கதை முழுவதும் இரவில் மட்டுமே நடக்கிறது. இதற்காக பல மாதங்கள் இரவு முழுக்க கண் விழித்து  நடித்திருக்கிறார் தன்ஷிகா. ‘இதுவரை எந்த நடிகையும் இந்த மாதிரி நடிச்சிருக்க முடியாது. ‘இரவினில் ஆட்டம்... பகலினில் தூக்கம்’னு ஒரு பாட்டு  வரும். அது என்னைப் பொறுத்தவரை உண்மை.

மற்ற படங்களோட ஷூட்டிங் பகல்ல நடக்கும். அதை முடிச்சிட்டு, ‘விழித்திரு’ படத்துக்கு ராத்திரி வருவேன். நிஜமாவே இது வித்தியாசமான  அனுபவமா இருந்தது’ என்ற அவர் கைவசம் ‘திறந்திடு சீசே’, ‘காத்தாடி’, ‘மால்’, ‘கிட்ணா’ படங்கள் இருக்கின்றன. தற்போது மேலும் இரு படங்களில்  ஒப்பந்தமாகி இருக்கிறார்.

- தேவா