யூகன்ஐ.டி கம்பெனியில் வேலைபார்க்கும் சிலரை ஒரு ஆவி போட்டுத் தள்ளுகிறது. ஏன்? எதற்காக? என்பதை நறுக் சுருக் திரைக்கதையில் ஆவிபறக்க  சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல்.ஜி.ஹீரோயின் சாக்‌ஷி அகர்வால், நடிக்கவும் தெரியும் என்று நிரூபிக்கிறார். ஆவியாக வரும்  சோனாக்‌ஷியின் நடிப்பில் மிரட்டல் தெறிக்கிறது.

ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவில் ஆவிகளுக்குரிய இருட்டுப்பதிவு அருமை. ராஷாந்த் அர்வின் இசையில் முருகன் மந்திரம் எழுதிய ‘யாரு யாரடி நீ யாரு  யாரடி…’ பாடல் மனதில் நிற்கிறது.தனக்குப் பரிச்சயமான ஐ.டி கம்பெனியையே கதைக்களமாக எடுத்து, திரில்லாக இயக்கியிருக்கிறார் கமல்.ஜி.