அலர்ஜியில் அனுஷ்கா!அனுஷ்காவுக்கு இணையதளங்கள் என்றாலே பிடிக்காது. தேவையற்ற வதந்திகள் பரவுவது ஒருபுறம் இருந்தாலும், எல்லா நேரமும் அதை  கண்காணித்துக் கொண்டிருப்பது போரடிக்கும் விஷயம் என்கிறார். மேலும், செல்ஃபி எடுப்பவர்களைக் கண்டு அதிகமாகவே பயப்படுகிறாராம்.

 ‘ஏர்போர்ட், ஷூட்டிங் ஸ்பாட், சினிமா நிகழ்ச்சிகள்னு எங்கே போனாலும், என்கூட செல்ஃபி எடுக்கணும்னு நிறையபேர் போனைத் தூக்கிட்டு  வந்துடறாங்க. பெர்மிஷன் கூட கேட்கறதில்ல. திடீர்னு நெருக்கமா வந்து, ‘மேடம்... கொஞ்சம் சிரிங்க’ன்னு பயமுறுத்தறாங்க. வெளியே போய்  வர்றதுக்கு நிஜமாவே அலர்ஜியா இருக்குங்க’ என்று, படப்பிடிப்பு வட்டாரத்தில் சொல்லியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் நாகார்ஜுனா, கார்த்தி இணையும் படத்தில் நடிப்பதாக வாக்குறுதி அளித்த ஸ்ருதிஹாசன், அதை நிறைவேற்ற முடியாமல் தவித்தார்.  இதனால் கோர்ட், வழக்கு என்று மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டார். விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் அவர்,   நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். கார்த்தி படத்தில் தனக்குப் பதில்  நடிக்கும் தமன்னாவைப் பற்றி அவர் கமெண்ட் அடிக்கவில்லை. காரணம், தமன்னா தனது நெருங்கிய தோழிகள் லிஸ்ட்டில் ஸ்ருதிஹாசனுக்கு தனி இடம் கொடுத்திருப்பதுதான்.

- ராஜ்