உதார் விடும் நாயகன்!சாரிகா என்றால் கோடம்பாக்கத்து இயக்குனர்களுக்கு கிளாமர்தான் நினைவுக்கு வரும். அப்படியொரு வனப்பு அவருக்கு. இயக்குனர்களின்  நம்பிக்கைக்கு ஏற்ப அனைத்துப் படங்களிலும் கிளாமர் ரோல் ஏற்று வரும் அவருடைய மார்க்கெட் ஸ்டெடியாகவே போய்க்கொண்டிருக்கிறது. அதில்  புதுவரவுதான் சந்தோஷ் நாயகனாக நடிக்கும் ‘நிராயுதம்’ படம். இந்தப் படத்தில் சாரிகா அரை நிர்வாணமாக நடித்திருப்பதுதான் செய்தி. ‘‘சாரிகா அரை நிர்வாணமாக வரும் காட்சி படத்தின் ஒரு சிறு பகுதிதான்.

ஆனால் அதையும் தாண்டி படத்தில் நல்ல மெசேஜ் இருக்கு. நாயகன் சந்தோஷ் ஃபாரின் ரிட்டர்ன். எப்போதும் ஃபாரின் வாழ்க்கையைப் பற்றி உதார்  விடும் பார்ட்டி. கதாநாயகி சாரிகா ஐ.டி. ஃபீல்டில் வேலை செய்பவர். வேலை முடிந்து வீடு திரும்பும் அவரை கால் டாக்சி டிரைவர் வெங்கட் மயக்க  மருந்து கொடுத்து கடத்துகிறார்.

மயக்கம் தெளிந்த பிறகு தான் அரை நிர்வாணமாக இருப்பதை உணர்கிறார். அதே சமயம் தன்னைப் போல் ஹீரோ சந்தோஷும்  அதே இடத்தில்  அரை நிர்வாணத்தில் இருப்பதைப் பார்க்கிறார். அரைகுறை ஆடையுடன் இருக்கும் அவ்விருவரும் எதற்காக கடத்தப்பட்டார்கள்? எப்படி  தப்பித்தார்கள் என்பதுதான் கதை. நான் நினைத்ததைவிட படம் பிரமாதமாக வந்திருக்கு. அதற்கு சாரிகா கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம்’’  என்கிறார் இயக்குனர் ராஜதுரை.

-ரா