அவார்டுக்கு ஆசைப்படும் ஆண்ட்ரியாதமிழில் ‘விஸ்வரூபம் 2’, ‘புதிய திருப்பங்கள்’, ‘இது நம்ம ஆளு’, ‘தரமணி’, இந்தியில் ‘விஸ்வரூப் 2’, மலையாளத்தில் ‘லோஹம்’ படங்களில் நடிக்கும்  ஆண்ட்ரியா, பழைய காதல் நினைவுகளைக் குப்பைக்கூடையில் தூக்கிப் போட்டு விட்டாராம்.

இப்போது புதிய சிந்தனையுடன் நடிக்கும் அவர், நடிப்பு  மற்றும் பின்னணி பாடுவது, தனி ஆல்பத்துக்கு இசையமைத்துப் பாடி நடிப்பது போன்ற விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறாராம். அவார்டு  வாங்குவதற்கான நல்ல கேரக்டர் கிடைத்தால், நடிக்கத் தயாராக இருப்பதாக முன்னணி இயக்குனர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி, காத்திருக்கிறாராம்.

-ராஜ்