பிரபுதேவாவின் புதிய காதலி?



தேசிய விருது நடிகர்களை உருவாக்கிய இயக்குனர் பாலா, ‘நான் ஜோதிகாவின் தீவிர ரசிகன்’ என்று சொன்னார். இதைக் கேட்ட ஜோதிகா, பொலபொலவென்று கண்ணீர் விட்டார். இந்த சம்பவம், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா ரீஎன்ட்ரி தரும் ‘36 வயதினிலே’ ஆடியோ விழாவில் நடந்தது. மேடையில் பேசிய பாலா, ‘நான் சூர்யாவுக்காக வரல. ஜோதிகாவுக்காக வந்தேன். ஏன்னா, நான் ஜோதிகாவின் தீவிர ரசிகன்’ என்றார். ஏற்கெனவே பாலா தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா நடித்த ‘மாயாவி’ ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் காதலை முறித்துக்கொண்ட பிரபுதேவா, பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை தீவிரமாக காதலிப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசு பரவியுள்ளது. தமிழ் இயக்குனர் ஒருவர், இந்தியில் அதிக சம்பளம் வாங்குபவராக உயர்ந்துள்ளதை ஜீரணிக்க முடியாத சிலர், இதுபோல் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பி வருவதாக பிரபு தேவா தரப்பு கூறுகிறது.