‘ஆடுகளம்’ படம் விருதுகளை அள்ளி வருவதற்காக அயல்நாட்டுப் பயணத்துக்கு தயாராகிவிட்டதைப் படித்துப் பெருமிதம் அடைந்தேன்.
பா.பெல்சியா, நெல்லை.
நமீதாவின் நடுப்பக்க கவர்ச்சி படத்தைப் பார்த்துவிட்டு என்னோட தூக்கம் கெட்டுடுச்சு நைனா... சும்மா சொல்லக்கூடாது, கிறங்கடிக்கிற போட்டோ வாத்தியாரே...!
எஸ்.பூபதிராவ், சென்னை-30.
ஒரு படத்துல நடிக்க சம்பளமாக ஆறேழு விரல்களை உயர்த்துகிற டாப்ஸி மேட்டரை படிச்சு தலை சுத்திடுச்சுங்கோ...!
ஜி.புதியவன், திருப்பூர்.
புது டைரக்டரின் அட்டகாசத்தைப் பத்தி ‘சீக்ரெட் சரோஜா’ பகுதியில படித்து தலையில் அடித்துக் கொண்டேன்.
கு.ரவி, கும்பகோணம்.
பிட்ஸ் அபவுட் பகுதியில அனன்யாவின் பயோ&டேட்டா சும்மா ‘நச்’னு இருந்தது சார்!
வீ.கேசவ ராஜு,
கடலூர்.