சரவணன் சொன்ன சபாஷ்







 சரவணன் சொன்ன சபாஷ்

 கே.வி.ஆனந்த் படங்களில் இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பி.செல்லதுரையை ‘அம்பாசமுத்திரம்’ படத்தில் தனி ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினார் கருணாஸ். சுந்தர்.சி.யின் ‘நகரம்’, ‘சேவல் கொடி’ என தனி ஆவர்த்தனம் செய்த செல்லதுரைக்கு ஏவி.எம்மின் 175ஆவது படைப்பான ‘முதல் இடம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் பெருமை கிடைத்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த ஏவி.எம்.சரவணன், ‘‘ரொம்ப நல்லா வந்திருக்கு. முன்னணி கேமராமேன்கள் வரிசையில் நிச்சயம் உங்களுக்கு இடம் உண்டு’’ என்று பாராட்டியிருக்கிறார். ‘‘இதுவே எனக்கு தேசிய விருது’’ என்கிறார் செல்லதுரை.
என்

 உடும்பனில் பாவேந்தர்

பாரதிதாசன் பாடல்களை ஜெகநாதன் தயாரிக்கும் ‘உடும்பன்’ படத்துக்காக பயன்படுத்தி யுள்ளார் இசையமைப்பாளரும் இயக்குனருமான ராம்ஜி எஸ்.பாலன். திலிப் ரோஜர், நட்சத்திரா நடிக்கும் ‘‘இந்தப் படத்துக்காக பாவேந்தரின் நான்கு பாடல்களை மும்பையில் பதிவு செய்தோம்.

ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளனர். ஒரு மாபெரும் கவிஞனின் பாடலை பயன்படுத்துவது சந்தோஷமாக உள்ளது’’ என்கிறார் ராம்ஜி எஸ்.பாலன்.
 ரா

குமரா  விமர்சனம்

மனித நேயத்துக்காக போராடும் மாணவனின் கதை. மாணவனாக நடித்துள்ள ரதீஷ் ஆடல், பாடல், சண்டை என்று எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்கிறார். கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நெகிழ்ச்சி என்று முத்திரை பதிக்கிறார் ரூபஸ்ரீ.

அமரேந்திரா இசையில் விவேகா எழுதியுள்ள ‘கண்கள் தொட்டு கைகள் பட்டு...’ பாடல் இனிக்கிறது. மாணவர்கள் பற்றிய கதையை கமர்ஷியல் கலந்து போரடிக்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் சண்முக சுந்தரம்.

சிங்கையில் குருஷோத்திரம் விமர்சனம்

தன் குடும்பத்தை பழிவாங்கிய வில்லனை ஹீரோ எப்படி போட்டுத் தள்ளுகிறார் என்பதுதான் கதை. புதுமுகம் விஷ்ணுவின் அலட்டல் இல்லாத நடிப்புக்கு பாஸ்மார்க் போடலாம்.

குடும்பத்தை பழிவாங்கியவனையும், போதை கும்பலை சேர்ந்தவர்களையும் ஒரே நேரத்தில் களை எடுக்கும் போது ஆக்ஷன் ஹீரோவாக மின்னுகிறார். ரஃபியின் இசையில் தரம் தெரிகிறது. வழக்கமான காதல், சென்டிமென்ட் என்றில்லாமல் வித்தியாசமாக இயக்கியுள்ள தவமணிக்கு ‘சபாஷ்’ போடலாம்.