“ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஒரு புதுமுகத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன். அவர் அறிமுகமே தவிர புதுமுகம் அல்ல. எல்லோருக்கும் தெரிந்த முகம்தான்’’ என்று புதிராகப் பேசுகிறார் இயக்குநர் ராஜேஷ் எம்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், ரெட்ஜெயண்ட் சினிமா நிறுவனத்தை நடத்துபவர் என்று அடையாள அட்டை வைத்திருக்கும் உதயநிதியை புதுமுகம் என்று சொல்ல முடியாது அல்லவா?
‘‘ரவிகுமாரின் ‘ஆதவன்’ படத்துல ஒரு சின்ன சீன்ல உதயநிதி வருவார். நடிப்பு மேல அவருக்கிருந்த ஆசை அதில் வெளிப்பட்டது. ‘நல்லா பண்ணு வாருய்யா’ என்று ரவிகுமாரும் சர்டிபிகேட் கொடுத்தார்.
உதயநிதியின் நடிப்பு எப்படி இருக்கிறது என்பதை டெஸ்ட் செய்வதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ரிசல்ட் டுக்கு காத்திருந்த உதயநிதியிடம் அத்தனை பேரும் சொன்னது,
‘ஓ.கே, ஓ.கே’.நடுத்தர குடும்பத்து இளைஞனாக வரும் உதயநிதிக்கு ஹன்ஸிகா மோத்வானி ஜோடி சேர்ந்திருக்கிறார். சந்தானத்தின் தடாலடி காமெடியும் உண்டு.ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பக்காவான பாடல்களை உருவாக்கியுள்ளோம்.
குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய காதல் கதையை படமாக எடுத்துள்ளேன். எல்லோரும் டபுள் ஓ.கே சொல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது’’ என்கிறார் ராஜேஷ்.
நெல்பா