அறிந்தும் அறியாத பருவத்தில் இருக்கும் ஒரு காதல் ஜோடி பெற்றோர்களை புறக்கணித்துவிட்டு ‘ரன்’னாகிறார்கள். முடிவு சுபமா... சோகமா என்பதுதான் கதை.காதலன் விமல் நடராஜனும், காதலி சுப்ரஜாவும் வயதுக்கு மீறி பக்குவமாக நடித்திருக்கிறார்கள்.
சதீஸ், ஐஸ்வர்யா ஜோடியும் கச்சிதம். கேப்டன் காமராஜ் வித்தியாசமான வில்லனாக ஆஜராகிறார். சார்லி, மாணிக்க விநாயகம், ஜி.எம்.குமார், இயக்குனர் அகத்தியன் நடிப்பு உருக்கம்.
ஸ்ரீகாந்த் தேவா இசை இனிக்கிறது. ஆபாசம் இல்லாத ஒரு காதல் கதையை சுவாரஸ்யமாக படைத்திருக்கும் வீரபாண்டியனின் முயற்சியை பாராட்டலாம்.