‘‘நமக்கு முந்தைய தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளி, கருத்து வேறுபாடுகளைப் பற்றியதுதான் டி.ரவியின் ஜெயராம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ‘மகாராஜா’ படத்தின் கதை’’ என்கிறார் இயக்குனர் டி.மனோஹரன்.
இவர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இதில் நாயகனாக சத்யாவும் நாயகியாக அஞ்சலியும் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக அனிதா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிக்கும் நாசர் படத்தைப் பற்றிக் கூறும்போது, ‘‘என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் நான் ரசித்து நடித்த கதாபாத்திரம் எது என்றால் அது ‘மகாராஜா’வில் நடித்த பாத்திரம்தான். காரணம், இதுவரை எனக்குக் கிடைக்காத வேடம்’’ என்றார்.
‘அங்காடி தெரு’ படத்தில் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய அஞ்சலி, இதில் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியுள்ளார்.
சரண்யா, எம்.எஸ்.விஸ்வநாதன், தெலுங்கு நடிகர் எம்.எஸ்.நாராயணன் ஆகியோரின் கேரக்டரும் தனித்துவமாக இருக்கும். ‘மைனா’ படத்தைப்போல் எல்லாப் பாடல் களையும் ஹிட்டாகக் கொடுத் துள்ளார் இமான். என்னுடைய குருநாதர் படத்தைப் போல் இந்தப் படமும் முழுமையான கமர்ஷியலாக இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் டி.மனோஹரன்.
ரா