5 பன்ச்சு : பூஜா





அம்மா சந்தியா, இலங்கை. அப்பா உமாசங்கர், பெங்களூரு. ‘பூஜா கவுதமி உமாசங்கர்’ என்ற பெயரில், ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் நடித்தார். ஆனால், முதலில் ‘ஜே ஜே’ ரிலீசாகி விட்டது.

எம்.பி.ஏ படித்துள்ளார். பெங்களூருவில் சுற்றுச்சூழல் குறித்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, சமூக விழிப்புணர்வுப் பணிகளிலும், பிரசாரங்களிலும் ஈடுபடுகிறார். இதற்காக சம்பளம் வாங்குவதில்லை.

டூ வீலர் மற்றும் ஆட்டோவில் சவாரி செய்வதை பெரிதும் விரும்புவார். நெருக்கமான நண்பர்களின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடிப்பார். சமையலறைக்குச் சென்று, அனைவருக்கும் சமைத்துப் பரிமாறி அசத்தி விடுவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் தவிர சிங்கள மொழிப் படங்களிலும் நடிக்கிறார். ஆங்கில குறும்படத்திலும் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ படத்தில் சொந்தக்குரலில் பேசினார். இப்போது ‘விடியும்முன்’.

மூத்தவர்களை ‘அண்ணா’ என்று அழைப்பார். காதல் வலையில் சிக்காமல் ஓடுவார். அடிக்கடி ‘ரகசிய திருமணம்’ போன்ற வதந்திகளில் சிக்குவார். தவறான தகவல் தருபவர்கள் சிக்கினால், துணிச்சலுடன் எதிர்ப்பார். வழக்குப் போடவும் தயங்குவதில்லை.
- தேவராஜ்