நிருபர்களைத் திட்டிய ஐஸ்வர்யா ராய்





பாக்ஸ் ஆபீசின் ஆல்டைம் ரிக்கார்டை முறியடித¢துள்ளது ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரூ.202 கோடி வசூலை 15 நாளில் தாண்டி ரூ.204 கோடியை ஷாருக் படம் வசூலித்துவிட்டது.

‘ஸ்டூடன்ட் நம்பர் ஒன்’ பட நாயகி அலியா பட், இம்தியாஸ் அலி இயக்கும் ‘ஹைவே’ படத்தில் நடித்தபடி, ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தில் தமிழ் பிராமணப் பெண் வேடம் ஏற்கிறார்.

Ôதூம் 3Õ இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத¢தில் ரிலீசாகிறது. இதில் ஆமிர்கான் தனது ஜிம் உடல்கட்டை காட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘அக்னிபத்’ படத்துக்குப் பிறகு மல்ஹோத்ரா இயக்கும் அடுத்த படத்திலும் ஹிரித்திக் நடிக்கிறார். இதில் அவருக்கு கரீனா கபூர் ஜோடி.

சான்ஸ் இழந்த மூத்த நடிகைகள் ஒரு பாட்டுக்கு ஆடுவது பற்றி நிருபர்கள் ஐஸ்வர்யா ராயிடம் கேள்வி கேட்டனர். தன்னை மறைமுகமாகக் குத்திக்காட்டுவதாக நினைத்த ஐஸ், நிருபர்கள¢ மீது எரிந்து விழுந்தார். யார் ஆடுறாங்களோ அவங்களை போய் கேளுங்க என்றார் கோபமாக.

‘மென்டல்’ என்ற தலைப்பை பலர் கிண்டல் செய்ததால் அதை இப்போது ‘ஆஸாத்’ என மாற்றிவிட்டார் சல்மான் கான். சல்மானின் நெருங்கிய தோழரான ஆமிர்கானின் மகன் பெயர் ஆஸாத் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரே நாளில் 2 பெரிய படங்கள் ரிலீசாவது ஆரோக்கியமான போட்டி. அதை தடுக்க முயல்வது சரியல்ல என ஷாருக்கானை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் அஜய் தேவ்கன்.
- ஜியா