Boys - Girls





மலையாளத்தில் நான்கைந்து படங்களைத் தயாரித்த காதர் ஹசன் தமிழில் முதன்முறையாக தயாரித்து இயக்கும் படம் ‘குளு குளு நாட்கள்’. நாயகன் ஸ்ரீஜித். நாயகிகள் மாளவிகா, ரெய்சா. கதையை தாங்கிப் பிடிக்கும் முக்கியமான ரோலில் புதுமுகம் ஹரிஷ் நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், டி.பி.கஜேந்திரன் உட்பட ஏராளமான சீனியர்ஸும் நடிக்கிறார்களாம்.  

‘‘இந்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் காதலை எப்படி எதிர்நோக்குகிறார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லியுள்ளோம். பாய்ஸ் ஸ்கூலில் படித்த பையன்களும், கேர்ள்ஸ் ஸ்கூலில் படித்த பெண்களும் ப்ளஸ் டூவுக்குப் பிறகு டியூஷன் சென்டரில் ஒன்றாக படிக்கிறார்கள். அதுவரை அப்படி ஒரு சூழலைச் சந்திக்காத அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியுள்ளேன். க்ளைமாக்ஸ் அழுத்தமாகவும் இருக்கும்.



தமிழ் கலாச்சாரத்தை ஆராதிக்கும் பெண்ணாக மாளவிகா நடிக்கிறார். மேற்கத்திய கலாச்சாரத்தை நியாயப்படுத்தும் கேரக்டரில் ரெய்சா நடிக்கிறார். டேட்டிங் கலாச்சாரத்துக்கு இந்த இருவரும் தங்கள் ஸ்டைலில் எப்படி பதிலடி கொடுக்கிறார்கள் என்பது ஹைலைட்டாக இருக்கும். கன்னடத்தில் முன்னணியில் உள்ள பர்கான் ரோஷனின் இசை தமிழ் ஆடியன்ஸுக்கு புதிய அனுபவமாக இருக்கும். ‘போக்கிரி’ உட்பட ஏராளமான வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய பிரபாகர் இந்தப் படத்தின் வசனத்தை எழுதி இருப் பதுடன் இணை திரைக்கதாசிரியராகவும் வேலை பார்த்துள்ளார். ஒரே நேரத்தில் தயாரித்து இயக்குவது கடினம் என்றாலும் டைரக்ஷன் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்ட தால் கஷ்டமாகத் தெரியவில்லை...’’ என்கிறார் காதர் ஹசன்.
- எஸ்