5பன்ச்சு





* மும்பை பட்டதாரி. டி.வி நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் பிஸி மாடல். அப்பா வினோத் தல்வார், இந்தியில் ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்த சில படங்களை இயக்கியவர்.

* பாலே, ஜாஸ், ஹிப்  ஹாப் டான்ஸ் தெரியும். நடனப் பள்ளியில் மாஸ்டராக இருந்தார். ஹிரித்திக் ரோஷன், ஷாகித் கபூர், ஜான் ஆப்ரஹாமுடன் நடனப் போட்டியில் பங்கேற்றார்.

* இந்தியில் குழந்தை நட்சத்திரம். ‘தட்டத்தின் மறையத்து’ மலையாளப் படத்தில் ஹீரோயின். பிறகு தெலுங்கில். இப்போது தமிழ் ‘தில்லு முல்லு’ ரீமேக்கில் மாதவி ஏற்றிருந்த வேடம்.

* பிருந்தா நாயரிடம் மலையாளம் கற்றார். தமிழில் நல்ல டியூஷன் மாஸ்டரை தேடுகிறார். மல்லுவுட் முக்கியம் என்பதால், சென்னையில் குடியேறும் எண்ணம் இல்லை.

*
வில்லியாக நடிக்கவும் விருப்பம். கவர்ச்சி காட்ட அளவுகோல் இல்லை. கிசுகிசுக்கள் பிடிக்காது. கலகல டைப். குரல் ஒத்துழைக்காததால், டப்பிங் தொடர்கிறது.
- தேவராஜ்