ஒரே வாரத்தில் ரூ.100 கோடி கலெக்ஷன் செய்து அசத்தியுள்ளது ‘ஏ ஜவானி ஹே திவானி’. இப்பட ஹிட் காரணமாக ரன்பீர் கபூர் தனது சம்பளத்தை ரூ. 7 கோடியிலிருந்து ஒரேடியாக ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளார். தீபிகா படுகோன் ரூ.1 கோடியிலிருந்து ரூ.1.50 கோடியாக சம்பளம் உயர்த்திவிட்டாராம்.
தோள்பட்டை அறுவை சிகிச்சையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஷாருக்கான். இதனால் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ டிரெய¢லர் வெளியிடுவது தாமதமானது. அவர் வீட்டுக்கு திரும்பியதும் டிரெய¢லர் பார்த்து ஓகே சொன்னார். இதையடுத்து டிரெய¢லர் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆஷிகி 2’வில் நடித்த ஆதித்ய ராய் கபூர், பரினிதி சோப்ராவுடன் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தை யஷ் சோப்ராவின் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜியா கான் மறைந்ததும் அவரது வீட்டுக்குச் சென்று ஆமிர்கான் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி பல மணி நேரம் உடன் இருந்தார். சமீபத்தில் ஜியாகானுக்காக நடந்த சிறப்பு பிரார்த்தனையிலும் அவர் கலந்துகொண்டார்.
பிரியங்காவின் அப்பா அசோக் சோப்ரா கேன்சர் நோயால் கடந்த வாரம் இறந்தார். ஒரு மாதத்துக்கு ஷூட்டிங்கில் பங்கேற்காமல் தனிமையில் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார் பிரியங்கா.
மீடியாவின் கடும் விமர்சனங்களைத் தாண்டி முதல் 3 நாட்களில் ரூ.23 கோடி சம்பாதித¢துள்ளது தர்மேந்திராவின் ‘யம்லா பக்லா தீவானா 2’. இதையடுத்து அடுத்த படத்திலும் தர்மேந்திரா அவரது மகன்களுடன் நடிக்க உள்ளார்.
இயக்குநர் சாஜித் கானை ஜாக்குலைன் பிரிந்துவிட்டார். இவர்கள் பிரிவுக்கு தமன்னாவும் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் ஜாக்குலைனை நீக்கிவிட்டு, அவரது எதிரியான தமன்னாவை ஹீரோயினாக புக் செய்திருக்கிறார் சாஜித் கான். இந்தப் படத்தில் சைப் அலிகான் ஹீரோ.
- ஜியா