விமர்சனம்




யமுனா

முதல் பார்வையிலேயே காதலில் விழும் ஹீரோ சத்யா காதலிக்காக உயிரையே கொடுக்குமளவுக்கு துணிகிறார். காதல் கனிந்த பிறகு வழக்கம் போல் காதலர்கள் இதிலும் பிரச்னையை சந்திக்கிறார்கள். பிரச்சனைக்குப் பிறகு காதலர்கள் இணைந்தார்களா, பிரிந்தார்களா என்பது மீதிக்கதை. அறிமுக நாயகன் சத்யா, கவனிக்க வைக்கிறார். நாயகி ஸ்ரீரம்யா, அமர்க்களம். வில்லியாக வினோதினி, கச்சிதம். இலக்கியன் இசையில் வைரமுத்து வின் பாடல்கள் பரவசம். தொய்வில்லாமல் இயக்கியிருக்கிறார் இ.வி. கணேஷ்பாபு.

இசக்கி


கார் டிரைவரின் காதலை உதாசீனப்படுத்தும் பணக்கார நாயகி, பிறகு அந்தக் காதலின் அருமையை உணர்ந்தாரா என்பதே படம். இதை எதிர்பாரத திருப்பங்களுடன் சொல்லியுள்ளார்கள். ஆக்ஷன், காமெடி, நடிப்பு என அனைத்து ஏரியாக்களிலும் ஹீரோ சரண்குமார் கச்சிதம். நாயகி ஆஷ்ரிதா கேரக்டருக்கு பெருமை சேர்க்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பின்னணி இசை அதிரடி. முழுமையான கமர்ஷியல் சினிமா கொடுக்க இயக்குநர் எம்.கணேசன் முயற்சித்திருக்கிறார்.