அனுஷ்கா Vs ஹன்சிகா





சென்னையில் பிரமாண்டமாக நடந்த ‘சிங்கம்2’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அனுஷ்கா ஆப்சென்ட். அதுமட்டுமில்ல ஹன்சிகா அன்று முழுவதும் தன் பிசியான செட்யூல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு ‘சிங்கம்2’வுக்கான ப்ரொமோஷன் அனைத்திலும் கலக்கினார். சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் சூர்யா, கார்த்திக் இரண்டு பேரும் அருகில் நிற்க ‘இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா யாரையாவது ஒருத்தரை புரபோஸ் பண்ணியிருப்பேன்...’ என்று சொல்கிற அளவுக்கு ரொம்ப ஜாலியாக இருந்தார்.

அனுஷ்காவின் ஆப்சென்ட், ஹன்சிகாவின் என்ஜாய்மென்ட் இரண்டையும் முடிச்சுப் போட்டு பார்த்ததில் பாண்டுவுக்கு மூக்கு வியர்த்தது. அதோடு ‘நீங்க ஏன் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படம் எடுக்கக் கூடாது?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் ஹரி, ‘இரண்டு ஹீரோயின் வச்சு படம் எடுக்குறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு. ரெண்டு பேருக்கும் சரியான அளவில் சீன். இவருக்கு ரெண்டு பாட்டுன்னா, அவருக்கு ரெண்டு பாட்டு. அப்பப்பா போதும்டா சாமி...’ என்று சொன்னது வேறு மூளையைக் கசக்க வைச்சுது.

அனுஷ்கா ஏன் வரவில்லை என்று விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்...
முதல் சிங்கத்துல அனுஷ்கா ஹீரோயின்ங்கிறதால இதுல கன்டினியூ ஆகிறார். பள்ளி மாணவியாக உள்ளே வந்து அதகளம் செய்பவர் ஹன்சிகா. ஆரம்பத்துலேருந்து ரெண்டு பேருக்கும் மைண்டுல ஈகோ ஓடியிருக்கு. இதை புரிந்து கொண்ட இயக்குநர் ரெண்டு பேருக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துதான் ஸ்கிரிப்டை ரெடி பண்ணி யிருக்கிறார். ஆனா, இரண்டு பேரையும் சுற்றி இருக்குறவங்க ஏதோ சொல்லி பற்ற வைத்ததில் மனஸ்தாபம் மலையளவுக்கு உயர்ந்திருக்கு. அதான் அனுஷ்கா ஆப்சென்ட், ஹன்சிகா ஆட்டம் அரங்கேறியிருக்கு.

இயக்குநர் ஹரியிடம் இதுபத்தி கேட்டா, ‘‘அதான் அனுஷ்கா தெலுங்கு சாங் ரிலீஸ்ல கலந்துக்கிட்டாங்களே... விடுங்க அண்ணாச்சி...’’ என முடித்துக் கொள்கிறார்.
என்னமோ போங்க...
- சினிமா பாண்ட் 007