‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவுக்கு அடுத்து ரசிகர்களின் மனதில் நின்றவர் சரண்யா மோகன். அந்தப் படத்துக்குப் பிறகு மலையாளத்தில் நான் ஸ்டாப்பாக ஓடிக் கொண்டிருந்தவரை இயக்குநர் பி.ஜி.சுரேந்திரன் ‘கோலாகலம்’ படத்துக்காக தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். இதில் நாயகனாக புதுமுகம் அமல் நடிக்கிறார்.
கதையுடன் காமெடி கலந்திருந்தாலும் காமெடிக்காக பிரத்யேகமாக கஞ்சா கருப்புவும், மனோபாலாவும் இருக்கிறார்களாம். ஆல் கிளாஸ் ரசிகர்களும் ஆட்டம் போடுமளவுக்கு ‘செம செம ரகல... கலக்கப் போறேன் சகல...’ என்கிற பாடலை பின்னி மில்லில் பிரம்மாண்டமாக செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம். பரணி இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேகா எழுதியுள்ளார்.
‘‘இதில் எனக்கு ஹோம்லி வேடமாக இருந்தாலும் எல்லா ஏரியாக்களிலும் ரவுசு பண்ணுமளவுக்கு கனமான வேடம். எனக்கும் அமலுக்குமான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். தமிழில் ஏற்பட்ட இடைவெளியை இந்தப் படம் நிரப்பும்...’’ என்கிறார் சரண்யா மோகன்.
- ரா