காதல் மன்னனின் பேரன் காதலிக்கிறார்





ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் அபிநய் நடிக்கும் படம் ‘விளம்பரம்’. நாயகிகளாக ஐரா, ‘அட்டக்கத்தி’ ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். விளம்பரப் படம் தயாரிக்க மலேஷியாவுக்குச் செல்லும் ஹீரோவும், ஹீரோயினும் சந்திக்கும் பிரச்னையை காதல் காமெடி கலந்து சொல்லியுள்ளார்களாம்.

தாத்தாவின் புகழைக் காப்பாற்றும் வகையில் அபிநய் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறாராம். நாயகிகள் இருவரும் பாடலுக்கு மட்டும் வந்து போகும் வேலையைச் செய்யாமல் நடிப்பிலும் திறமை காண்பித்துள்ளார்களாம். புதுமுகங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில்தான் நடைபெறும். ஆனால், தயாரிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் முழு படப் பிடிப்பையும் மலேஷியாவில் நடத்தியிருக்கிறார். ‘‘திரைக்கதைதான் இந்தப் படத்தின் ஹைலைட். எதிர்பாராத விதமாக நடக்கும் ஒவ்வொரு திருப்பங்களும் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்...’’ என்கிறார் இயக்குநர் சூர்யநிதி.
- எஸ்