தெலுங்கு, இந்தி, தமிழ் என கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கிறார், தம்மு என்கிற தமன்னா. தமிழைத் தவிர மற்ற மொழிகளில் அம்மணிக்கு அமோக சம்பளம் கிடைக்கிறது. தமிழில் எப்போதுமே தகராறுதான். என்றாலும், அஜீத் ஜோடியாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடித்து வரும் அவருக்கு வழக்கமான சம்பளத்தை விட அதிகமாக கொடுத்திருக் கிறார்களாம்.
இந்நிலையில் அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ள படத்தில், ஓவர் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று தமன்னா அடம்பிடிப்பதாக தகவல் வெளியானது. இதை யாரோ அவரது காதில் ஓதிவிட்டனர். அவ்வளவுதான், அதிர்ந்து விட்டார். ‘‘அச்சச்சோ... என் உடல்வாகுக்கு ஃபேமிலி டைப் காஸ்டியூம்களை விட, கிளாமரான டிரெஸ்கள்தான் ரொம்ப பொருத்தமா இருக்கும். இதுவரை நான் நடிச்ச எல்லா படத்திலும் ஒரு மழைக்காட்சி இருக்கும். அந்தளவுக்கு அழகான கவர்ச்சி நாயகியா வலம் வரணும்னு துடிக்கிற நான், கிளாமர் பண்ண மாட்டேன்னு அடம்பிடிச்சதா யார் வதந்தி பரப்பினாங்கன்னு தெரியல...’’ என்ற ரீதியில் கருத்து சொல்லியிருக்கிறார். இது அவர் சொன்னதா? அல்லது அவர் சொன்னதாக டோலிவுட் ஏரியாவில் யாராவது திரித்துச் சொன்னதா என்று தெரியவில்லை.
எனவே, ரசிகர்கள் பயப்பட வேண்டாம். தமன்னாவிடம் என்ன எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களோ, அதை கண்டிப்பாக அவர் தருவார். இயக்குநர்கள் சும்மா விடுவார்களா என்ன?
- தேவராஜ்