நடுப்பக்கத்துல மோனாலிசா போஸ் பார்த்துட்டு சும்மா ‘கிர்’ ஆயிடுச்சு தலைவா!
எஸ்.சுகுமார், சென்னை.
ரத்தினச் சுருக் பேட்டி பகுதியில் இயக்குனர் ஆர்.கண்ணனின் ரத்தினச் சுருக் பதில் படிக்க ‘நறுக்’கென்று இருந்தது.
டி.சிவகுமார், புதுச்சேரி.
‘முகமூடி’ படத்தைப் பற்றி படிக்கும் போதே அந்த சினிமாவைப் பார்க்க அதிக அளவில் வெறிகொண்டு இருக்கிறேன் சார்!
ஜி, சுந்தர், தேனி.
டைரக்டர் மு.களஞ்சியத்துடன் கல்யாணம் நடந்து விட்டது என்று வரும் வதந்தி யால் நொந்து போய் உள்ள அஞ்சலியை நினைச்சா பாவமா கீது நைனா!
சு.டி.சுரேந்தர், சென்னை-14.
தேவயானி நடிச்ச முதல் இந்திப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்ற சேதியை படிச்சேன். உமக்கு மட்டும் எப்படி இதுபோல தகவல் எல்லாம் கெடைக்குது?
வீ.தனபால், வேலூர்.