மனம் போல வாழ்வு



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         உயரம் குறைவு; உள்ளம் நிறைவு. பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளர்களை மகிழவைப்பவர். டி.பி.கஜேந்திரனுடன் ஒரு சுருக் சந்திப்பு.

டி.பி. என்றால்?
தூத்துக்குடி பெருமாள்

சினிமா தொடர்பு?
பழம்பெரும் நடிகை டி.பி.முத்துலட்சுமி எனது வளர்ப்புத் தாய். அவருடன் 7 வயதிலேயே ஸ்டுடியோக்களுக்கு சென்றுள்ளேன்.

முதல் சினிமா வாய்ப்பு?
‘நிலவு பொல்லாதது’ படத்தில் சீகம்பட்டி ராஜகோபாலிடம் உதவியாளன்.

வழிகாட்டிகள்?
மோகன் காந்திராமன், ஏ.கே.வேலன், நடிகை லட்சுமி, ஏ.ஜகந்நாதன், கே.பாலசந்தர், விசு படங்களில் பணியாற்றும் போது அவர்கள் காட்டிய வழி வாழ்க்கைக்கு உதவுகிறது.

முதல் இயக்கம்?
‘உங்கள் உதவியாளர்கள் யாரும் படம் இயக்கவில்லையே’ என்று ஒரு பத்திரிகையாளர் விசுவிடம் கேட்டார். அடுத்த சில நாட்களிலேயே அவர் ‘எனது, உதவியாளர் கஜேந்திரன் படம் இயக்குகிறார், என்று அறிவித்து ‘வீடு மனைவி மக்கள்’ படத்தை இயக்கச் சொன்னார். அது 7 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

நடிகராக இருப்பது?
பெருமை + சந்தோஷம்

தத்துவம்?
5 பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பார்கள். நான் ஆண்டியாகவில்லை. மனம் போல வாழ்வு.
 நெல்லைபாரதி