“கறுப்பு பணம் ரூபாய் பத்தாயிரம் கோடியை நான்கு மாணவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். அந்த மாணவர் களிடமிருந்து அதைக் கைப்பற்ற பறி கொடுத்த கும்பலும், போலீஸும் துரத்துகிறது.
அவர்கள் பிடியிலிருந்து மாணவர் கள் தப்பிக்கிறார்களா, இல்லையா என்பதை விறுவிறுப்பான த்ரில்லர் பாணியில் சொல்லும் படம்தான் முக்தா சீனிவாசன் வழங்கும் மாயா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் என்.ஆர்.சீனிவாசன் தயாரிக்கும் ‘பத்தாயிரம் கோடி’ படத்தின் கதை.
நாயகனாக துருவ் நடிக்கிறார். நாயகியாக ‘தம்பிக்கு இந்த ஊரு’ மடால்ஷா நடிக்கிறார். அரசியல் தரகர் வேடத்தில் பல்ஜித் கவுர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் விவேக் நடிக்கிறார். துருவ், மடால்ஷா பங்கேற்ற ‘படிச்சி படிச்சி முடிச்சி முடிச்சி...’ என்ற பாடல் காட்சியை பாண்டிச்சேரியில் படமாக்கினோம். பாலிவுட்டில் செட்டிலான மடால்ஷா இந்தப் படத்தில் தனக்கான ஸ்கோப் அதிகம் இருந்ததால் முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளார்.
சிரிப்பு போலீஸ், சீரியஸ் போலீஸ் என்று இரண்டு மாறுபட்ட கெட்&அப்பில் நடித்துள்ள விவேக்கின் பங்களிப்பு இதில் பெரியளவில் இருக்கும்.
த்ரில்லர் படமாக இருந்தாலும் சமுதாயத்திற்கு தேவையான மெசேஜும் உண்டு’’ என்கிறார் இயக்குனர் சீனிவாசன் சுந்தர்.
எஸ்