4 வருடம் ஓடிய படம்Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        ஐந்தாவது வயதில் நாடக மேடை ஏறிய எஸ்.ஜி.கிட்டப்பா தனது 28ஆவது வயதில், அதே நாடக மேடையில் மரணமடைந்தார். அவருக்குப்பின் நடிக்கவந்த பலரும் சுந்தரப்பா, மருதப்பா, சிங்காரப்பா, செல்லப்பா என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.

ஒரு நாடகக் குழுவில் நடிக்கும் சிறுவர் களை இன்னொரு நாடகக்குழுவுக்கு கடத்தி வருவதற்காக அந்தக் காலத்தில் தரகர்கள் இருந்திருக்கிறார்கள்.

முதல் தமிழ்ப்படம் ‘காளிதாஸ்’. அதை தயாரித்தவர் பம்பாய் இம்பீரியல் மூவிடோன் அதிபர் அர்தேஷிர் இராணி. இந்திக்காரர் தயாரித்த அந்தப் படத்தில் நடித்த நாயகன் தெலுங்குக்காரர்.

ராஜ பதவியில் இருக்கும் ஒருவர் மகாராணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார். இதுதான் ‘ராஜ துரோகி’ அல்லது ‘தர்மபுரி ரகசியம்’ படத்தின் கதை. அந்தப் படத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டதாம்.

ஹாலிவுட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த முதல் சினிமாப் படம் ‘ஏசுவின் வாழ்க்கை’. அது 4 வருடங்கள் ஓடியது. ஏனென்றால் அதுவரை வேறு படங்கள் வெளிவர வில்லை.

இந்திப் பட ஸ்டண்ட் கதாநாயகன் ஜான்கவாஸ், கே.ஆர்.செல்லம் இணைந்து நடித்த ‘வனராஜ கார்ஸன்’தான் முதன்முதலில் காடுகளில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம்.

கே.சாரங்கபாணி, எம்.என்.நம்பியார், நவாப் ராஜமாணிக்கம் நடித்த ‘பக்த ராமதாஸ்’ படத்தில் பெண்கள் இடம்பெறவில்லை.

ஏற்கெனவே திருமணம் ஆனதை மறைத்து, டி.ஏ.மதுரத்தை மனைவி ஆக்கிக் கொண்டாராம் என்.எஸ்.கிருஷ்ணன்.
நெல்பா