பிரசாத் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே.வி.பிரசாத் தயாரிக்கும் படம் ‘கொள்ளைக்காரன்’. படத்தின் நாயகன் விதார்த் படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்...
‘‘எனக்கு இது ‘மைனா’வுக்குப் பிறகு ஒரு யதார்த்தமான கதை. ஊதாரித்தனமாக சிறிய தவறுகள் செய்யும் ஹீரோவுக்கு சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்னை வருகிறது. அந்தப் பிரச்னையை எதிர் கொண்டு ஜெயிப்பதுதான் கதை. எனக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார்.
வில்லனாக ரவி ஷங்கர் நடித்துள்ளார். அக்கா தம்பி உறவின் மேன்மையை சொல்லும் இதில் அக்காவாக ‘பசங்க’ செந்தி நடித்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைவரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து காண்பித்துள்ளார்கள். பாரதிராஜாவின் திரைக்கதை, பாக்யராஜின் யதார்த்தம், பாண்டியராஜின் நகைக்சுவை என்று சொல்லுமளவுக்கு ரசனையுடன் கதை சொல்லியிருப்பார் இயக்குனர் தமிழ்ச்செல்வன்’’ என்று இயக்குனருக்கு புகழ்மாலை சூட்டுகிறார் விதார்த்.
எஸ்